Monday 12 May 2014

முல்லைபெரியாறு-முழு வரலாறு

முல்லைபெரியாறு-முழு வரலாறு:

தமிழ்நாட்டில் வறட்சியால் தவிக்கும் தென்மாவட்டங்களின் குடிநீர் மற்றும் விவசாய தேவைக்காக மேற்கு தொடர்ச்சி மலையில் தமிழக -கேரளா எல்லையில் பெரியாறு நதியின் குறுக்கே கேரளாவின் திருவிதாங்கூர் சமஸ்தானமும் ஆங்கிலேயர் அரசின் சென்னை மாகாண கவர்னரும் கடந்த 1886-ம் ஆண்டில் செய்துகொண்ட ஒப்பந்தத்தின்படி 1895-ம் ஆண்டில் முல்லைபெரியாறு அணை கட்டிமுடிக்கப்பட்டது .

இந்த ஒப்பந்தத்தின்படி அணையில் தேக்கப்படும் தண்ணீர் தமிழகத்திற்கு சொந்தம் அணையில் நீர் தேங்கும் சுமார் 8ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பிற்காக சமஸ்தானத்துக்கு சென்னை மாகாண நிர்வாகம் ஆண்டிற்கு 42ஆயிரத்து 963ரூபாய் கட்டணமாக செலுத்த வேண்டும்

முல்லை பெரியாறு அணை தென்தமிழக மக்களின் வாழ்க்கையோடு பின்னிப்பிணைந்தது .சுமார் 200 ஆண்டுகளுக்கு முன்னர் வறட்சியின் காரணமாக ஏற்பட்ட பஞ்சத்தின் கோரப்பிடியில் சிக்கி தென்மாவட்ட மக்கள் கொத்து கொத்தாக செத்து மடிந்தனர் அந்த பகுதி மக்களின் பசியை போக்க கிடைத்த அட்சய பாத்திரம் தான் முல்லை பெரியாறு அணை இந்த அணை கட்டப்பட்ட பிறகுதான் அவர்கள் வயிறார சாப்பிட முடிந்தது .

இந்தஅணை சாதாரண செங்கல்லாலும் சுண்ணாம்பாலும் கட்டப்பட்டதல்ல .ஏழை தமிழ் மக்களின் ரத்தத்தாலும் வியர்வையாலும் உருவான நீர்த்தேக்கம் இது .அணை கட்டும் பணியில் ஈடுபட்ட எத்தனையோ தமிழர்கள் உயிர் இழந்திருக்கிறார்கள் .ஆனால் அவர்களின் தியாகம் வீண் போகவில்லை அது அவர்களுடைய சந்ததிகளுக்கு வாழ்வளித்து கொண்டிருக்கிறது .

மதுரை மாவட்டத்தின் தென்மேற்கு எல்லையான கேரள மலைப் பகுதியில் அமைந்துள்ள பெரியாறு ஆற்றுப்படுகை மலைப்பாறைகளுக்கு இடையில் உற்பத்தியான நதி கேரள மாநிலத்தில் மேற்கு நோக்கி ஓடி திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் வழியாகச்சென்று அரபிக்கடலில் கலந்தது .இப்படி கலந்த பெரிய ஆறே பெரியாறு என அழைக்கப்பட்டது .இந்த ஆற்றின் குறுக்கே அணையை கட்டி அணையில் தேங்கும் நீரை மலையை குடைந்து சுரங்கப்பாதை வழியாக வெளியேற்றி ஒருங்கிணைந்த மதுரை மாவட்டத்தில் உள்ள வைகை ஆற்றில் கலக்க செய்வதே பெரியாற்று திட்டமாகும் .

இந்நிலையில் 1810ம் ஆண்டு ஏப்ரல் மாதம்முதல் தேதியிலிருந்து 1811ம் ஆண்டு மார்ச் 31ம் தேதிவரை ஏற்பட்ட கடுமையான பஞ்சத்தால் 56 ஆயிரத்து 135 பேர் இறந்தனர் .

மதுரை திண்டுக்கல் பகுதிகளில் 1813ம் ஆண்டில் இதேபோல உருவான பஞ்சம் உருவான நேரத்தில் ஆங்கிலேயர் ஆட்சிக்காலம் என்பதால் அபோதைய மதுரை கலெக்டர் வருவாய்துறைக்கு எழுதிய கடிதம் ஒன்றில் அடிக்கடி தாக்கக்கூடிய பஞ்சம் உழைக்கக்கூடிய மக்களை பரிதாபத்துக்கு உள்ளாக்கி இருக்கிறது என்று குறிப்பிட்டுள்ளார் .

இந்த பஞ்சத்தால் தென்மாவட்ட மக்களில் 1லட்சத்து 50ஆயிரம் பேர் பாம்பனில் கூடி இலங்கைக்கும் தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கும் இடம்பெயர்ந்தனர் .இந்த பரிதாபகரமான பொருளாதார சூழ்நிலையில் இருந்து பாதிக்கப்பட்ட மக்களை காப்பற்றுவதற்கு பெரியாறு திட்டம் ஒன்றே வழியென ஆங்கிலேயர்கள் முடிவு செய்து அதற்கான தீவிர நடவடிக்கைகளில் ஈடுபடதொடங்கினர் .

பலகட்ட பேச்சுவார்த்தைக்கு பின்னர் திருவிதாங்கூர் அரசாங்கத்திற்கும் ஆங்கிலேய அரசாங்கத்திற்கும் இடையில் ஒப்பந்தம் ஏற்பட்டது .இவ்வுடன்படிக்கையின் முக்கிய அம்சம் என்னவென்றால் 999 வருடங்களுக்கு இந்த உடன்படிக்கை செல்லும் என்றும் 2885 பின்னர் மீண்டும் குத்தகை நீடிக்கப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது

1867-மேஜர் ரைவ்ஸ் பெரியாறு நதியின் குறுக்கே ஒருஅணைகட்டி தேங்கும் நீரை கிழக்கில் மேட்டுப்பகுதியாக இருக்கும் இடத்தில் திறப்பு ஏற்படுத்தி திருப்பிவிடதிட்டம்தீட்டினார்.இந்தஆய்வு அறிக்கையைபெற்றுக்கொண்ட அரசுஇந்தபணியை சுமித்என்ற மற்றொருபொறியாளரிடம் ஒப்படைத்தது.

சுமித்அந்தஇடத்திற்குசெல்லக்கூடிய பாதுகாப்பான சாலைகளைசிறிதுதூரத்திற்கு அமைத்தார்.இவர்1872-ல்175அடிஉயரமுடையஅணைகட்டி433அடிநீளத்திற்கு,நீர்செல்லும்பாதாளகுகைவழியைஅமைக்கதிட்டம்தீட்டினர்.

ஆங்கிலஅரசு
ஜான்பென்னிகுக்என்பவரையும்இத்திட்டத்தில்இணைத்தது.ஜான்பென்னிகுக் மற்றும்சுமித்ஆகியோரிடம் பெரியாறுஅணைசம்மந்தமாக வெவ்வேறு அறிக்கைகளை தயார்செய்துகொடுக்குமாறு ஆங்கிலஅரசுஉத்தரவிட்டது.

இவ்விரண்டு பொறியாளர்களில் பென்னிகுவிக் கொடுத்த அறிக்கையில் விவரமாகவும் விரிவாகவும் இருந்தது.நீரைஅணைகட்டி திருப்புவதற்கான அதிநுட்பம்வாய்ந்த தலைசிறந்த அறிக்கையை பென்னிகுவிக் அரசாங்கத்திற்கு அளித்திருந்ததே அதற்குகாரணம்.

இந்தஅறிக்கையில்திருப்திஅடைந்தஅரசாங்கம் இந்ததிட்டத்தை தீட்டிய பென்னிகுவிக்கிடமே அதுவரை தயாரிக்கப்பட்ட அணைத்திட்டம் தொடர்பான அனைத்து அறிக்கைகளையும் ஒப்படைத்தது .பென்னிகுவிக் இத்திட்டத்தை செயல்படுத்த முனைப்புடன் இறங்கினார் .அணைகட்டும் வேலை 1887 -ல்தான் தொடங்கப்பட்டது .சென்னை மாகாண ஆளுநரான கண்ணிமாரப்பிரபுவும் சென்னை மாகாண தலைமைசெயலாளரான கேஸ்டேட்வும் தொடக்க விழாவில்பங்கேற்றனர்.

அணைகட்டும்பணி தொடங்கியவுடன் நியமிக்கபட்டுஇருந்த பொறுப்புள்ள அதிகாரிகள் பலர் சொல்லமுடியாத துன்பங்களையும் கஷ்டங்களையும்அனுபவித்தனர்.இக்காரணங்களால்கட்டுமான பணிகள் மெதுவாக நடைபெற்றன.

பணியாற்றிக்கொண்டுஇருந்த பணியாளர்களிடம் தோற்று நோய்கள் பரவதொடங்கின .இதனால் ஆயிரக்கணக்கான மக்கள் பலியாக நேரிட்டது.

பெரியாறு கட்டுமானபணிக்கு தேவையான பாகங்களை இங்கிலாந்துநாட்டில் இருந்துபொறுப்புள்ள அதிகாரிகள் கொண்டுவந்த பிறகுஅதனைஅணை கட்டும்இடத்திற்கு எடுத்துசெல்ல போதிய வகையில் போக்குவரத்துவசதிகள் இல்லாததால் பெரியாற்றுக்கு செல்லும் செங்குத்தான 15 கிலோமீட்டர் மலைபாதையில் ஏறுவது கடினமான வேலையாக இருந்தது .

அனைத்துபொருட்களும் மலையடிவாரத்திற்கு அருகில்கொண்டுவரப்பட்டு அங்கிருந்து நீராவியின் மூலம் இயங்ககூடிய ராட்சதஎந்திரங்கள்மூலம்இழுப்புகயிறுகள் வழியாக பொருட்கள்எடுத்துசெல்லப்பட்டுள்ளன.

இவ்வாறு எடுத்து செல்லப்பட்ட பொருட்கள் திடீரென ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் அடித்துசெல்லப்பட்டுள்ளன.இது மட்டுமல்லாது பென்னிகுவிக் மனைவிதன்னுடைய நகைகளைமற்றும் சொத்துக்களைவிற்று
அந்தபணத்தையும் அணைக்கட்டு திட்டத்திற்கு நன்கொடையாக அளித்தார் .இவ்வாறு பெருமுயற்சிக்குபின்பு 10-10-1895 அன்று மாலை ஆறு மணிக்கு முல்லைபெரியாறு அணையில் மதுரை மாவட்டத்திற்கு தண்ணீர்திறந்து விடப்பட்டது.

பத்தொன்பதாம்நூற்றாண்டில் சென்னை நீர்பாசன துறையின் மிகச்சிறந்த சாதனையாக இத்திட்டம் கருதப்பட்டது.இத்திட்டத்தால் தேனி,திண்டுக்கல்,மதுரை,ராமநாதபுரம்,சிவகங்கைமாவட்டங்கள்
பயன்பெறுகின்றன

.இப்பெரியாறுஅணைக்கட்டு திட்டத்தில்தான் மலையை குடைந்து இந்த அளவு தண்ணீர் திருப்பப்பட்டது உலகத்திலேயே முதல்முறையாக நடைபெற்றது.முல்லைபெரியாறு அணையின் சிறப்பம்சம் என்னவெனில் எல்லா அணைககட்டுகளிலும் அணைமுன்னால் அமைந்திருக்கும் பின்பகுதி பாறை அல்லது இயற்கை தடுப்புகளால் தடுக்கப்பட்டிருக்கும் அனால் இந்த அணைகட்டோ பெரியாற்றின் பின் பகுதியில் அமைந்திருக்கிறது.

பெரியாறு மற்றும் வைகை அணையால் கம்பம் பள்ளத்தாக்கு முதல் ராமநாதபுரம் வரையுள்ள ஒரு லட்சத்து நாற்பத்து ஆறாயிரம் ஏக்கர் பரப்பளவு விவசாய நிலங்கள் செழிப்பான பாசன வசதிபெறுகின்றன .ஒரு காலத்தில் வறட்சிமிகுந்த பகுதியாக திகழ்ந்த இப்பகுதி தற்போது அளவிற்குஅதிகமாக உணவு தானியங்கள் உற்பத்தி செய்யும் நிலையில் உள்ளது.

Thursday 14 March 2013

"மதுரையில் அனைத்து கல்லூரிகள் மாணவர்கள் சார்பாக நடந்த மாபெரும் பேரணி"

14-03-2013

தமிழர் பகுதியில் இருந்து ராணுவத்தை விலக்கவும்.
பொது வாக்கெடுப்பு நடத்தி சுதந்திர ஈழ நாட்டை அறிவிக்கவும்.
இனப்படுகொலை செய்த இலங்கை மற்றும் அனைத்து அரசுகளை தண்டிக்கவும்.
இலங்கையில் ஆசிய நாடுகள் அல்லாத ஒரு குழுவின் மூலம் விசாரணை நடத்தவும்
அமெரிக்க தீர்மானம் இனப்படுகொலையை கண்டிக்காததர்க்கு எதிர்ப்பு தெரிவித்தும்.

தனி ஈழம் தவிர வேறு தீர்வு ஏதும் இல்லை என வலியுறுத்தி...
அனைத்து மதுரை மாணவர்கள் நடத்திய பேரணி...
























Monday 12 December 2011

DAM 999

முல்லைப் பெரியாறு:
           
முல்லை பெரியாறு அணை மேற்குத் தொடர்ச்சி மலையில் துவங்கி மேற்கு நோக்கி கேரளாவில் பாயும் பெரியாற்றின் மீது கட்டப்பட்ட அணையாகும். இது தமிழக-கேரள எல்லையில் அமைந்துள்ளது. இது கட்டப்பட்ட இடம் கேரளாவுக்கும் அணை தமிழகத்திற்கும் உரியது. தமிழக பொதுப்பணித்துறை இவ்வணையை பராமரித்து வருகிறது. 1895 ஆம் ஆண்டு இது ஆங்கிலேயர்களால் கட்டப்பட்டது. இதன் கொள்ளளவு 15.5 டி.எம்.சி மற்றும் உயரம் 155 அடி ஆகும். இந்த அணையின் நீர்பிடி பகுதியில் வன சரணாலயம் தேக்கடி உள்ளது. இதன் கீழ்பாசனத்தில் இடுக்கி அணை கட்டப்பட்டுள்ளது.


அணை வரலாறு:

மதுரை நாடு என்பது மதுரை மாவட்டம்திருச்சி மாவட்டம்இராமநாதபுரம் மாவட்டம், நெல்லை மாவட்டங்களும், தென்திருவாங்கூர் பகுதியும் அடங்கும். 1529 முதல் 1564 வரை விஸ்வநாத நாயக்கர் ஆட்சி செய்தார். 1572 வரை முதலாம் கிருஷ்ணப்ப நாயக்கரும், 1595 வரை வீரப்ப நாயக்கரும் ஆட்சி செய்தனர். 1601 வரை இரண்டாம் கிருஷ்ணப்ப நாயக்கரும், 1623 வரை முத்துவீரப்ப நாயக்கரும், 1659 வரை திருமலை நாயக்கரும் ஆட்சி செய்தனர்திருமலை நாயக்கர் முதல் இராணி மங்கம்மாள்ஆட்சி வரை ஒவ்வொரு காலகட்டத்தில் திருவாங்கூர் ராஜாக்கள் வரி செலுத்த மறுத்தனர். பின் போரில் தோல்வியுற்று வரி செலுத்தினர்.1790 மார்ச் 6ல் மதுரை மாவட்டம் உதயமானது. ஏப்.5ல் முதல் கலெக்டராக . மிக்லட் நியமிக்கப்பட்டார். 1798ல் இராமநாதபுரம் மன்னர் சேதுபதி, முல்லை, பெரியாறு நதிகளை இணைத்து அணை கட்டி தண்ணீர் முழுவதையும் மதுரைஇராமநாதபுரம் பகுதிக்கு கொண்டு வர திட்டமிட்டார்.
இதற்காக முத்து இருளப்பபிள்ளை தலைமையில் 12 பேர் அடங்கிய குழுவை மேற்கு தொடர்ச்சி மலைக்கு அனுப்பினார். அந்த குழு தங்கி காடுகளை அழித்து, அணை கட்டும் இடத்தை தேர்வு செய்து மதிப்பீடு தயார் செய்தது. நிதி வசதியின்றி திட்டத்தை நிறைவேற்ற முடியவில்லை என ஆவணங்கள் தெரிவிக்கின்றன. 1807ல் மதுரை கலெக்டர் ஜார்ஸ்பேரிஸ், மேற்கு தொடர்ச்சி மலைக்கு சென்று பெரியாறு அணை கட்ட திட்டமிட்டுள்ள இடத்தை பார்வையிட்டு, ஆய்வு செய்ய மாவட்ட பொறியாளர் ஜேம்ஸ் கார்டுவெல்லுக்கு உத்தரவிட்டார்.ஆனால் 1808ல் நடைமுறைக்கு ஒத்துவராத திட்டம் என கார்டுவெல் அறிக்கை தந்தார். 1837ல் கர்னல் பேபர் சின்னமுல்லையாறு தண்ணீரை மண் அணை மூலம் திருப்பும் பணியில் ஈடுபட்ட போது, வேலையாட்களுக்கு காய்ச்சல் ஏற்பட்டதாலும், கூலி அதிகம் கேட்டதாலும் பணி நடக்கவில்லை என்று ஆவணங்கள் தெரிவிக்கின்றன. 1867ல் மேஜர் ரைவ்ஸ் என்பவர் தண்ணீரை கிழக்கே திருப்புவதுதான
முக்கிய நோக்கம் என்று 17.50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டாலான அறிக்கை சமர்ப்பித்துள்ளார். மேற்குத் தொடர்ச்சி மலையின் காடுகளில் உருவாகி அரபிக்கடலில் சென்று வீணாகக் கலந்து கொண்டிருந்த பெரியாறு நீரைப் பயன்படுத்த அன்றைய ஆங்கிலேய அரசு முடிவு செய்து அந்தப்பகுதியில் அணை ஒன்றைக் கட்டத் தீர்மானித்தது. பெரியாற்றின் குறுக்கே மண் அணை அமைத்து அந்த ஆற்றின் நீரைக் கிழக்குப் பக்கமாகத் திருப்புவதற்கான வரைவுத் திட்டம் ஒன்றை சுமித் என்கிற ஆங்கிலேயர் தயார் செய்தார். இந்தத் திட்டத்திற்கு தலைமைப் பொறியாளராக இருந்த வாக்கர் என்பவர் எதிர்ப்பு தெரிவித்தார். இதனால் இந்த அணைத் திட்டம் நிறைவேற்றுவதில் காலதாமதம் ஏற்பட்டது. மேலும் 1876 ஆம் ஆண்டில் சென்னை மாகாணம் கடுமையான பஞ்சத்தால் பாதிக்கப்பட்டதால் இந்த அணைத்திட்டம் மேலும் காலதாமதம் ஆனது.
ஆங்கிலேய அரசின் ஆணைப்படி மேஜர் ஜான் பென்னிகுயிக் என்பவர் 1882-ல் அணையைக் கட்டுவதற்கான திட்டத்தைத் தயாரித்தார். இத்திட்டத்தின்படி ஆற்றின் அடிப்பகுதியிலிருந்து 155 அடி உயரமும், ஆற்றின் தளத்திற்கு கீழே 18 அடி ஆழமும் அணையின் மேல் 4 அடி அகலத்தில் 5 அடி உயரக் கைப்பிடிச்சுவர் ஒன்றும் கட்ட முடிவு செய்யப்பட்டது. இத்திட்டத்தின்படி அணையை அடைத்துத் தேங்கியிருக்கும் தண்ணீரை எதிர்ப்புறத் திசையிலிருந்து வாய்க்கால் வழியே கொண்டு வருவது என்றும் இந்த வாய்க்காலின் நீளம் 6500 அடியாகவும் இதற்கான் தலைமை மதகின் தரை மட்டம் 109 அடி என்றும் தீர்மானிக்கப்பட்டது. மேலும் இங்கிருந்து மேற்குத் தொடர்ச்சி மலையின் கிழக்குப் பகுதிக்குத் தண்ணீரைக் கொண்டு செல்ல மலையினுள்ளே 5900 அடி வரை சுரங்கம் அமைத்து இதன் வழியே வைரவன் ஆற்றில் கலந்து அப்படியே அதைச் சுருளி ஆற்றில் கலந்து வைகை ஆற்றுடன் இணைக்கத் திட்டமிடப்பட்டது.

ஒப்பந்தம்:

அணை கட்டப்படும் பகுதி திருவாங்கூர் சமஸ்தானத்துடன் இருந்ததால் அதனுடன் இடம், லாபப்பங்கீடு போன்றவைகளுக்கான பேச்சு வார்த்தை நான்கு ஆண்டுகளாக நடத்தப்பட்டு 1886 ஆம் ஆண்டு அக்டோபர் 26 ஆம் தேதியில் ஒரு ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டது. இதன்படி திருவாங்கூர் சமஸ்தானத்திற்கு (தற்போதைய கேரளா)சென்னை மாகாணம் (தற்போதைய தமிழ்நாடு) அணையின் 155 அடி உயரத்திற்குத் தண்ணீர் தேங்கும் பகுதியான 8000 ஏக்கர் நிலப்பரப்பு மற்றும் அணைகட்டுவதற்கும் பிற பணிகளுக்குமாக 100 ஏக்கர் சேர்த்து 8100 ஏக்கருக்கு குத்தகைப் பணம் செலுத்த வேண்டும் என்பது உட்பட 7 அம்சங்கள் அந்த ஒப்பந்தத்தில் இடம் பெற்றுள்ளது. இதற்கு தமிழகம் குத்தகைத் தொகையாக 1896ல் இருந்து 1970 வரை ஏக்கருக்கு 5 ரூபாய் என்று கொடுத்து வந்தது. கேரளம், 1970 ஆம் வருடம் அந்த ஒப்பந்தத்தைத் திருத்தி, ஆண்டிற்கு 5 ரூபாய் என்றிருந்த குத்தகைத்தொகையை 30 என மாற்றி, அணையிலும் அதைச் சார்ந்த நீர்ப்பிடிப்பு மற்றும் குளம், குட்டை போன்ற நீர் நிலைகளிலும் மீன் பிடிக்கும் உரிமையும் தமிழகத்திடம் இருந்து எழுதி வாங்கிக் கொண்டது. இவ்வொப்பந்தம் 999 ஆண்டுகளுக்குச் செல்லுபடி ஆகும் என்றும் குறிக்கப்பட்டது. இதன்படி இவ்வணையிலிருந்து 104 அடிக்கு மேலுள்ள நீர் குகை மூலம் வைகைப் படுகைக்கு திருப்பி விடப்பட்டு இப்பகுதி பாசன வசதி பெறுகிறது.
இந்த ஒப்பந்தத்திற்குப் பிறகு 1887 செப்டம்பர் மாதத்தில் அணை கட்டும் பணி துவங்கப்பட்டது. இந்தப்பகுதி முழுவதும் அடர்ந்த காட்டுப் பகுதியாக இருந்ததால் பொறியாளரான மேஜர் ஜான் பென்னி குயிக் இதற்காக அதிக அளவில் இயந்திரங்களைப் பயன்படுத்த முடிவு செய்தார். இதன்படி சென்னை மாகாணத்தின் கூடலூர்மலைப்பகுதியிலிருந்து தேக்கடி வரையும் அங்கிருந்து அணை கட்டும் பகுதி வரை கம்பிவடப் பாதைகளை அமைத்து அதற்கான பொருட்களைக் கொண்டு சென்றார். இந்த அணையின் கட்டுமானப்பணிகளுக்காக 80 ஆயிரம் டன் சுண்ணாம்புக்கல் பயன்படுத்தப்பட்டது.
இந்த பெரியாறு அணை 1893-ல் 60 அடி உயரத்திற்கும் அதன்பின்பு 1894-ல் 94 அடி உயரத்திற்கும் 1895 டிசம்பர் மாதத்தில் 155 அடியும் கட்டி முடிக்கப்பட்டு கைப்பிடிச் சுவரும் கட்டப்பட்டது. கட்டி முடிக்கப்பட்ட இந்த அணையை சென்னை மாகாண ஆளுநராக இருந்த வென்லாக் பிரபு திறந்து வைத்தார்.

மின் உற்பத்தி:

1955-ம் ஆண்டு பெரியாறு தண்ணீர் தமிழ்நாட்டில் நுழையும் இடத்தில் மின் உற்பத்தி செய்வதற்கு ஒரு திட்டம் வகுக்கப் பெற்றது. 1970-ம் ஆண்டு கேரளத்துடன் செய்து கொண்ட புது ஒப்பந்தத்தின் படி இங்கு தமிழகம் 140 மெகாவாட் திறன் கொண்ட மின் நிலையத்தை அமைத்துள்ளது. இது தமிழகத்திற்கு வரும் நீரை கொண்டு உற்பத்தி செய்யப்படும் மின்சாரமாகும்.

அணை பயன்பாடு:

இந்த அணையில் இருந்து முல்லை ஆறாக வரும் நீர் தமிழ்நாடு அரசின் தேனி மாவட்டத்தின் கம்பம் பள்ளத்தாக்குப் பகுதியில் உள்ள விவசாய நிலங்களுக்குத் தேவையான தண்ணீர் அளிக்கப் பயன்படுகிறது. இந்த முல்லை ஆற்றின் வழியிலுள்ள கூடலூர்கம்பம்சின்னமனூர்தேனி போன்ற தேனி மாவட்டத்தின் முக்கிய நகரங்கள் மற்றும் இடைப்பட்ட பல ஊர்களின் குடிநீர்த் தேவையையும் நிறைவேற்றுகிறது.
இந்த முல்லை ஆறு தேனி நகருக்குக் கிழக்குப் பகுதியில் வைகை ஆறுடன் கலந்து வைகை அணையின் ஆதாரமாகவும் விளங்குகிறது. இதன் பின்பு மதுரைசிவகங்கை,இராமநாதபுரம் மாவட்டங்களின் விவசாய நிலங்களுக்குத் தேவையான தண்ணீரையும்மதுரை மாநகராட்சியின் குடிநீர்த் தேவையையும்ஆண்டிபட்டிஉசிலம்பட்டி, சேடப்பட்டிப் பகுதிகளிலுள்ள கிராமங்களுக்கான தனிக் குடிநீர்திட்டம் மூலம் குடிநீர்த் தேவையையும் நிறைவேற்றி வருகிறது.

சிக்கல்:

1979ல் மலையாள மனோரமா ஏடு, அணைக்கு ஆபத்து என்று செய்தியை பரப்ப கேரள அரசு அணையின் மொத்த அளவான 152 அடியிலிருந்து 136 அடியாக குறைத்து விட்டது. கேரள மக்களின் அச்சம் போக்கும் பொருட்டு, தமிழகம் அந்த அணையை மேலும் வலுப்படுத்த எல்லா முயற்சிகளையும் செய்த பின் 152 அடி நீரைத் தேக்கலாம் என்று முடிவு செய்யப் பட்டது.
தமிழகம் அணையை வலுப்படுத்திய பின்னும் கேரள அரசு அணையின் நீர் மட்டத்தை உயர்த்த ஒத்துக்கொள்ள வில்லை. இந்த சிக்கல் உச்ச நீதி மன்றத்துக்கு சென்றது. உச்ச நீதி மன்றம் வல்லுனர் குழுவை அனுப்பி அணையை ஆராய்ந்து 142 அடி வரை உயர்த்த உத்தரவிட்டது. ஆனால் கேரள அரசு இந்த உத்தரவை ஏற்க மறுக்கிறது.


முல்லைப் பெரியாறு பிரதான கால்வாய்:

முல்லை பெரியாறு பிரதானக் கால்வாய், மதுரைதிண்டுக்கல் மாவட்ட பகுதிகளின் விவசாய தேவைகளை நிறைவேற்றுவதற்காக முன்னாள் முதலமைச்சர் காமராஜர் ஆட்சி காலத்தில் சிமெண்டால் கட்டப்பட்ட நீர்ப்பாசன கால்வாய் ஆகும்.முல்லைப் பெரியாறு அணையில் இருந்து வைகை அணைக்கு பயணமாகும் தண்ணீர் திண்டுக்கல் மாவட்டம் அணைப்பட்டி கிராமம் அருகே வைகை ஆற்றில் இருந்து பிரித்து விடப்படுகிறது. இந்த கால்வாய் அதன் பிறகு மதுரை மாவட்ட எல்லைக்குள் நுழைந்து மட்டப்பாறைவாடிப்பட்டிஅலங்காநல்லூர்கள்ளந்திரி ஆகிய ஊர்களை கடந்து மேலூர் வரை செல்கிறது. இடையில் நூற்றுக்கும் மேலான இக்கால்வாய் இடையில் உள்ள கிராமங்கள் அனைத்திற்கும் ஜீவாதாரமாக விளங்குகிறது. இந்த கால்வாய் மூலம் பெறப்படும் நீரால் பெரும்பாலும் நெல் விவசாயமும் அதை தவிர்த்து கரும்பு, வாழை, தென்னை போன்ற விவசாயமும் செய்யப்படுகிறது.

 -T.K.பாலன் பாலாஜி